கரோனா நெருக்கடியால் 100 நாள் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரி முனைவர்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 28, 2021

கரோனா நெருக்கடியால் 100 நாள் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரி முனைவர்கள்

 கரோனா நெருக்கடியால் 100 நாள் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரி முனைவர்கள்


கரோனா தொற்றின் காரணமாக வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் அதிகரித்துள்ளது. படித்த பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் இளங்கலை முதல் பிஎச்.டி வரை படித்துள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (100 நாள் வேலை) விண்ணப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து ஹாவேரி மாவட்ட ஊரக வேலை நிர்வாக அதிகாரி முகமது ரோஷன் கூறும்போது, ''கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது ஏராளமான படித்த இளைஞர்கள் வேலை இழந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பினர்.


கடந்த ஓராண்டாக நிறுவனங்கள் பழைய நிலைக்கு திரும்பாததால் அவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை நிலவுகிறது. இதனால் ஹாவேரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,649 பட்டதாரிகள் ஊரக வேலைக்கு விண்ணப்பித்தனர். இந்த‌ ஆண்டு 4,842 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மல்குந்த் கிராமத்தில் மட்டும் 24 முதுகலை பட்டதாரிகள், 2 பிஎச்.டி படித்தவர்கள் ஊரக‌ வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர்'' என்றார்.

No comments:

Post a Comment