13 கொரோனா விதிகளை பின்பற்ற அனைத்து அலுவலகங்களுக்கும் தலைமை செயலர் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 27, 2021

13 கொரோனா விதிகளை பின்பற்ற அனைத்து அலுவலகங்களுக்கும் தலைமை செயலர் உத்தரவு

 13 கொரோனா விதிகளை பின்பற்ற அனைத்து அலுவலகங்களுக்கும் தலைமை செயலர் உத்தரவு


அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை தலைவர்களுக்கும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், கடிதம் அனுப்பி உள்ளார்.


கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:


அலுவலகத்தில் பணிபுரிவோர் இடையே, 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்


 அனைவரும்எப்போதும் முக கவசம்அல்லது முக தடுப்பு அணிந்திருக்க வேண்டும்


அடிக்கடி கைகளை, 40 முதல், 60 வினாடிகள் சோப்பால் கழுவ வேண்டும் 


கிருமி நாசினி பயன்படுத்தினால், குறைந்தது, 20 வினாடிகள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்


தும்மல், இருமல் வந்தால், டிஷ்யூ பேப்பர், கைகுட்டை பயன்படுத்த வேண்டும். துப்புவது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்


அனைவரும் தங் கள் மொபைல் போனில், 'ஆரோக்கிய சேது' செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டும், அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின், அனுமதிக்க வேண்டும்


மதிய உணவின் போதும், ஊழியர்கள் சமூக இடை வெளியை பராமரிக்க வேண்டும்


ஏசி' அறையில், 24 டிகிரி முதல், 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரிக்கப்பட வேண்டும். அறைகள் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்


 பணி செய்யும் இடத்தை, தொடர்ச்சியாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.


அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும்


யாருக்கேனும் நோய் அறிகுறி இருந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு நோய் தொற்று உறுதியானால், அவர்கள் பணிபுரிந்த அறை முழுவதையும், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்


 தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்


அலுவலகத்தில் பணி புரிவோர்; தடுப்பூசி போட தகுதியானோர்; முதல் டோஸ், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் விபரத்தை, வரும், 30ம் தேதிக்குள், அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் வாரந்தோறும், தடுப்பூசி போட்டவர்கள் குறித்த விபரத்தை அனுப்ப வேண்டும்.இவ்வாறு ராஜிவ் ரஞ்சன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment