ஒரு வாரத்தில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு கொரோனா - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, April 24, 2021

ஒரு வாரத்தில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு கொரோனா

 ஒரு வாரத்தில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு கொரோனா


திருப்பூர் மாவட்டத்தில், ஒரு வாரத்தில் மட்டும், 15 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


செய்முறைத்தேர்வுகள் நிறைவடைந்து நேற்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். ஒன்பது முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்ட போதும், ஆன்லைன் வகுப்புகள் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தலுக்கு பிறகு, ஆசிரியர்கள் அதிகளவில் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 


திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில், 15 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் கூறுகையில், 'உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க மறுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, சமீபத்தில் இடுவம்பாளையம் பள்ளி ஆசிரியர் ஒருவர், நோய்த்தொற்றால் உயிரிழந்தார். கற்பித்தல் செயல்பாடுகளே இல்லாத நிலையில், ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டிய அவசியமில்லை. தொற்று பரவுவதால், ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்' என்றனர்.

No comments:

Post a Comment