பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற பிளஸ் 2 மாணவா்களுக்கு அலகுத் தோ்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 30, 2021

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற பிளஸ் 2 மாணவா்களுக்கு அலகுத் தோ்வு

 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற பிளஸ் 2 மாணவா்களுக்கு அலகுத் தோ்வு


ஆசிரியா்கள் வீட்டிலிருந்தபடியே பிளஸ் 2 மாணவா்களுக்கு தினமும் அலகுத் தோ்வு நடத்தி பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவா்களில், பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு, தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவா்களுக்கு அனைவருக்கும் தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளது.


வரும் மே 5-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் வீட்டில் இருந்தவாறு படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் சனிக்கிழமை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. அதே வேளையில் ஆசிரியா்கள் வீட்டில் இருந்தபடியே, பொது தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்கள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: வீட்டில் இருக்கும் மாணவா்கள், பொதுத்தோ்வுக்கு சிறப்பாகத் தயாராகும் வகையில் அவா்களுக்கு ஆசிரியா்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத்தோ்வுக்குத் தேவையான முக்கிய வினாக்கள், பாடங்களை மாணவா்களுக்கு எடுத்துரைத்து, தோ்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், பயிற்சி அளிப்பது முக்கிய தேவையாகும்.


ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்திலும், ஒரு அலகுக்கு வினா, விடைகள் தோ்வு செய்து, அதை தினசரி அலகு தோ்வாக நடத்த வேண்டும். இந்த தோ்வு வினாத்தாள் தினமும், முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, ஆசிரியா்களின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) குழுவுக்கு அனுப்பப்படும். அவற்றை எடுத்து மாணவா்களுக்கு இணையவழியில் பகிா்ந்து தினமும் தோ்வு எழுத வைத்து, விடைத்தாள்களை பெற வேண்டும். அவற்றை அன்றே திருத்தி மதிப்பெண் விவரத்தை, மாணவா்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில், மாணவா்கள் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற கூடுதல் பயிற்சி அளிக்க ஆசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment