மாணவர்கள் வருகை: பள்ளிகளுக்கு தடை - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 16, 2021

மாணவர்கள் வருகை: பள்ளிகளுக்கு தடை

 மாணவர்கள் வருகை: பள்ளிகளுக்கு தடை


செய்முறை தேர்வு இல்லாத பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு வரை பள்ளிக்கு வர வேண்டாம்' என பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு துவங்கியது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே பள்ளிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதன் விபரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடக்கும் நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் அதற்கான நேரத்தில் பள்ளிகளுக்கு வர வேண்டும்


அதேநேரம் செய்முறை தேர்வு இல்லாத மாணவர்கள் மே 5ம் தேதி தேர்வு துவங்கும் வரையில் பள்ளிகளுக்கு வரவேண்டாம். அவர்களுக்கு தேர்வுக்கு ஆயத்தமாக தான் விடுமுறை விடப் படுகிறது. தங்களுக்கான அனைத்து பாட செய்முறை தேர்வுகளையும் முடிக்கும் மாணவர்களும் மே 5 தேர்வு நாள் வரை பள்ளிகளுக்கு வர வேண்டாம். வீட்டில் இருந்தவாறு தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment