பேஸ்புக் சமூக வலைதள பயனாளிகளுக்கு எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 20, 2021

பேஸ்புக் சமூக வலைதள பயனாளிகளுக்கு எச்சரிக்கை

 பேஸ்புக் சமூக வலைதள பயனாளிகளுக்கு எச்சரிக்கை


சமூக வலைதளமான, 'பேஸ்புக்' பயன்படுத்தும், 61 லட்சம் இந்தியர் உட்பட, உலகெங்கும், 45 கோடி பேரின் தனிபர் தகவல்கள் சமீபத்தில் திருடப்பட்டன. அதனால், தங்கள் விபரங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்' என, பயனாளர்களுக்கு, 'செர்ட்இன்' எனப்படும், இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு அமைப்பு எச்சரித்துள்ளது.


'சைபர்' எனப்படும், இணையதள தாக்குதல்களில் இருந்து இந்தியர்களின் தகவல்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது, செர்ட்இன் என்ற அமைப்பு. இந்த அமைப்பு, சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் நடக்கும் சைபர் தாக்குதல் குறித்து ஆராய்ந்து, அரசுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.சமூக வலைதளங்கள் பயன்பாட்டில், இந்தியா முன்னிலையில் உள்ளது. நம் நாட்டில், பேஸ்புக்கை, 41 கோடி பேரும்; வாட்ஸ் ஆப் செயலியை, 53 கோடி பேரும்; இன்ஸ்டாகிராம் செயலியை, 21 கோடி பேரும் பயன்படுத்துகின்றனர்.


இந்நிலையில், பேஸ்புக் சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும், 61 லட்சம் இந்தியர் உட்பட, 45 கோடி பேரின் தனிபட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, சமீபத்தில் செய்திகள் வெளியாயின. ஆனால், 'இது, 2019ல் நடந்த சம்பவம். பழைய தகவல்களே திருடப்பட்டன. அந்தப் பிரச்னை, அந்தாண்டே சரி செய்யப்பட்டு விட்டது' என, அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.



இந்நிலையில், செர்ட்இன் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:'டேட்டா ஸ்கிராப்பிங்' எனப்படும் தொழில்நுட்பம் வாயிலாக, பேஸ்புக் சமூக வலைதளத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன. பயனாளிகளின், 'இ - மெயில்' முகவரி, அவர்களது முழு பெயர், தொலைபேசி எண், பிறந்த தேதி, பணியாற்றும் இடம் போன்ற தகவல்கள் திருடப்பட்டுள்ளன.அந்த வகையில், 61 லட்சம் இந்தியர் உட்பட, உலகெங்கும், 45 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. ஆனால், 'பயனாளிகளின் நிதி தகவல்கள், பாஸ்வேர்டு எனப்படும் ரகசிய குறியீடு உள்ளிட்டவை திருடப்படவில்லை' என, பேஸ்புக் கூறியுள்ளது.பேஸ்புக் நிறுவனம் தன் தளத்தை மேம்படுத்தும்போது, பயனாளிகளின் தகவல்கள், பொதுவாக தெரியும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.ஒருவருடைய தொலைபேசி எண்ணை வைத்தே, அவர் குறித்த தகவல்களை பேஸ்புக்கில் பெற முடியும். இந்த வசதியை நிறுத்தியுள்ளதாக பேஸ்புக் கூறுகிறது


ஆனாலும், ஒருவரது தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.இதுபோன்று தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதை தடுக்க, உங்களது பேஸ்புக் கணக்கில், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். நம் தகவல்களை யார் யார் பார்க்கலாம் என்பதை நாமே நிர்ணயித்து கொள்ள முடியும்; அந்த வசதியை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


கடந்த, 2018, மார்ச்சிலும், இதுபோன்று, பேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருடப்பட்டதாக செய்தி வெளியானது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம், 5.62 லட்சம் இந்தியரின் தகவல்களை திருடியது.உலகெங்கும் இதுபோல், 8.70 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.இந்தத் தகவல்களின் அடிப்படையில், தேர்தல்களில் மோசடி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

No comments:

Post a Comment