குழந்தைகளுக்கு உதவி ஆணையம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 30, 2021

குழந்தைகளுக்கு உதவி ஆணையம் அறிவிப்பு

 குழந்தைகளுக்கு உதவி ஆணையம் அறிவிப்பு


புதுடில்லி:கொரோனா நெருக்கடியால் தனித்து விடப்படும் குழந்தைகளுக்காக, டில்லி குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சிறப்பு உதவி எண்ணை அறிவித்தது.

டி.சி.பி.சி.ஆர்., எனப்படும், டில்லி குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பெற்றோர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதால், குழந்தைகள் தனித்து விடப்படுகின்றனர். இதனால், அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்


எனவே, அவர்களுக்கு உதவும் வகையில், +91 93115 51393 என்ற சிறப்பு உதவி எண் அறிமுகம் செய்யப்படுகிறது. தனித்து விடப்படும் குழந்தைகளின் பிரச்னைகள், இதன் வாயிலாக தீர்க்கப்படும்.மருந்துகள் வினியோகம், தங்குவதற்கு இடம், உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment