உறுதி செய்யப்படும் ஆசிரியர்கள் வருகை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 22, 2021

உறுதி செய்யப்படும் ஆசிரியர்கள் வருகை

 உறுதி செய்யப்படும் ஆசிரியர்கள் வருகை


பிளஸ் 2, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பொதுப்பிரிவு மற்றும் தொழில்கல்வி பாடங்களுக்கான செய்முறைத்தேர்வு வரும், 23ம் தேதி வரை நடத்தப்படுகிறது.கொரோனா பரவலால், செய்முறைத்தேர்வு அல்லாத மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுக்கு முந்தைய நாள் வரை, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செய்முறைத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 23ம் தேதிக்கு பின், விடுமுறை அறிவிக்கப்படும்.


 அதேநேரம், வரும், 30ம் தேதி வரை, பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என, தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டாலும், ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும். ஓட்டு எண்ணிக்கைக்கு பின், விடுமுறை குறித்து விவரம் தெரிவிக்கப்படும். ஏப்., 30 வரை, ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்படும்,' என்றனர்

No comments:

Post a Comment