அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது... மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்த பரிசீலினை செய்க : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 7, 2021

அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது... மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்த பரிசீலினை செய்க : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது... மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்த பரிசீலினை செய்க : தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பயின்ற தமிழக கல்லூரி மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்து தமிழக அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது.


 மேலும், அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது


இந்நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.


 மேலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரி தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாம் என கலந்து ஆலோசிக்க அறிவுறுத்தினர்.


 அத்துடன் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என பல்கலை. வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment