தடையை மீறி தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 20, 2021

தடையை மீறி தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

 தடையை மீறி தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்


ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 


இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 


சென்னையில் 2000 காவல்துறையினர் ஊரடங்கு பணியில் ஈடுபடுவார்கள். தடையை மீறி செல்பவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 200 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்படுகிறது. 


ஊரடங்கு நேரத்தில் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். சாலையில் யாரேனும் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். உரிய காரணம் இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுவர்.


ரயில், விமான டிக்கெட்டுகள் இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவர். அதேபோன்று திருமணத்திற்குச் செல்வோர் திருமண அழைப்பிதழ் வைத்திருக்க வேண்டும், திருமண வீட்டாரிடம் தகவல் உறுதி செய்யப்படும்.


இந்த ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கரோனாவைத் தடுக்க முடியும். கரோனா குறைந்தால் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவை இருக்காது. 


பத்திரிக்கைத் துறையினருக்கு கட்டுப்பாடுகள் இருக்காது, அவர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபடலாம் என்றார். 

No comments:

Post a Comment