நிவாரணத் தொகை‌ ரூ 2000 வழங்கப்படும் தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 8, 2021

நிவாரணத் தொகை‌ ரூ 2000 வழங்கப்படும் தேதி அறிவிப்பு

 நிவாரணத் தொகை‌ ரூ 2000 வழங்கப்படும் தேதி அறிவிப்பு


அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மே 10-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் பொறுப்புகளை வெள்ளிக்கிழமை ஏற்றாா். கரோனா நிவாரணத் தொகை வழங்குவது உள்பட ஐந்து முக்கியத் திட்டங்களில் அவா் கையெழுத்திட்டாா்.


இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் தொடா்ந்து அதிகரித்து வருவதால், இன்னலுக்கு ஆளாகும் மக்களின் துன்பங்களைப் போக்கவும், வாழ்வாதாரத்துக்கு உதவிடவும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.


தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் இரு தவணைகளில் ரூ.4 ஆயிரம் கொடுக்கப்படும். இதற்காக ரூ.4,153.39 கோடி செலவாகும். முதல் தவணை மே மாதத்திலே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கும் என்பது குறித்த விவரங்களை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார்.


தமிழகம் முழுவதும் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையான ரூ.2,000 நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை வரும் 10ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி, நிவாரண நிதி வழங்கும் திட்டம் 10 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும்.


தமிழகத்தில் 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும். குடும்ப அட்டையில் பெயர் இருக்கும் யார் ஒருவரும் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.


தமிழக மக்ளுக்கு நிவாரண நிதியாக ரூ.4,000-ல் முதல் தவணை ரூ.2,000-ஐ வழங்கும் திட்டத்தின்படி, ரேஷன் கடைகளில் தினமும் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படும். முறையாக டோக்கன் வழங்கப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment