ப்ளஸ் 2 ஆன்லைன் வகுப்பு எப்படி? தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்ய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

இங்கே தேடவும்!

Monday, May 10, 2021

ப்ளஸ் 2 ஆன்லைன் வகுப்பு எப்படி? தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்ய உத்தரவு

 ப்ளஸ் 2 ஆன்லைன் வகுப்பு எப்படி? தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்ய உத்தரவு


கோவை:பிளஸ் 2 மாணவர்களுக்கான, ஆன்லைன் வகுப்புகள் நடப்பதை உறுதி செய்வதோடு, தேர்வுக்கு மாணவர்களின் தயாரிப்பு முறைகள் குறித்து, ஆய்வு செய்ய, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கும் வரை, வீட்டிலிருந்து படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தினசரி ஆன்லைன் வகுப்புகள் மூலம், மாணவர்களின் சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்க, ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்களும் தற்போது பள்ளிக்கு வராததால், வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் மூலம், மாணவர்களுடன் தொடர்பில் இருக்க, அந்தந்த பள்ளிகள் சார்பில், பாடவாரியாக அட்டவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டது.இதை, அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்றுவதை, மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்து வருகின்றனர்.பள்ளி தலைமையாசிரியர்கள், அடிக்கடி ஆன்லைன் வகுப்பில் இணைந்து, மாணவர்களுடன் கலந்துரையாடவும், தேர்வுக்கு தயாராக உற்சாகமூட்ட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புக்கு, வராத மாணவர்களின் நிலை குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''பிளஸ் 2 மாணவர்களுக்கு, அந்தந்த பாட ஆசிரியர்கள், திருப்புதல் தேர்வு நடத்தி வருகின்றனர். 

                           Must Read

                   கோவிட்-19 நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நடத்தைகள் ( 54 பக்கங்கள் :பட விளக்கத்துடன்)

குறிப்பிட்ட பாட பகுதிகளை, முன்கூட்டியே தெரிவித்து, தேர்வு நடத்துவதால், மாணவர்களும் தேர்வை எதிர்கொள்வதில், சிக்கல் இருக்காது. இதை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆய்வு செய்து வருகின்றனர்,'' என்றார்.

No comments:

Post a Comment