பிளஸ் 2 தேர்வு: நாளை ஆலோசனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 8, 2021

பிளஸ் 2 தேர்வு: நாளை ஆலோசனை

 பிளஸ் 2 தேர்வு: நாளை ஆலோசனை


பிளஸ் 2 பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நாளை ஆலோசனை நடத்துகிறார்.


தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கொரோனா பரவலால், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், செய்முறை தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த மாதம், 5ம் தேதி பொதுத் தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால், தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மற்றும் கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது


இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வை நேரடியாக நடத்துவதா அல்லது ஆன்லைனில், 'மல்டிபிள் சாய்ஸ்' வினா அடிப்படையில் நடத்தலாமா என்பது குறித்து, ஆலோசனை நடைபெற உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment