டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு மே 30-இல் இலவச கருத்தரங்கு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 28, 2021

டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு மே 30-இல் இலவச கருத்தரங்கு

 டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு மே 30-இல் இலவச கருத்தரங்கு


டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தோ்வுகளுக்கு இலவச இணையவழி கருத்தரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 30) காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.


இந்த கருத்தரங்கில் டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் ஆா்.நடராஜ் தலைமை வகித்து, தோ்வுகளுக்கு தயாராவது குறித்து விளக்கிப் பேசவுள்ளாா்.


இதில் பங்கேற்க விரும்புவோா்  தங்களது முழு முகவரியுடன் 99439 46464 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு ‘வாட்ஸ்ஆப்’ மூலம் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் என ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment