ஐ.டி.ஐ., முடித்த 4500 பேருக்கு மின் வாரியத்தில் தொழில் பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 20, 2021

ஐ.டி.ஐ., முடித்த 4500 பேருக்கு மின் வாரியத்தில் தொழில் பயிற்சி

 ஐ.டி.ஐ., முடித்த 4500 பேருக்கு மின் வாரியத்தில் தொழில் பயிற்சி


ஐ.டி.ஐ., முடித்த 4,500 பேருக்கு, மின் வாரியம், 'அப்ரென்டிஸ்' எனப்படும், தொழில் பழகுனர் பயிற்சி அளிக்க உள்ளது.தமிழக மின் வாரியத்தில், மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் உள்ளன.


இவற்றில் இன்ஜினியரிங், டிப்ளமா, ஐ.டி.ஐ., படித்தோர், தொழில் பழகுனர் பயிற்சி மேற்கொள்வர். அதன்படி நடப்பு நிதியாண்டில், ஐ.டி.ஐ., முடிந்த 4,500 பேருக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது


ஐ.டி.ஐ.,யில், 'எலக்ட்ரிஷியன், பிட்டர்' படிப்புகளை முடித்தவர்களுக்கு மட்டுமே, மின் வாரியத்தில் இதுவரை, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப் பட்டது. இம்முறை, அந்த பிரிவுகள் மட்டுமின்றி, 'ஒயர்மேன், வெல்டர், சர்வேயர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், சிவில்' படிப்புகளை முடித்துள்ள 4,500 பேருக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


இதுதொடர்பாக விளம்பரம் செய்து, ஐ.டி.ஐ., முடித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் பட்டியலை பெற்று, பயிற்சி அளிக்கும்படி, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கும், மின் நிலையங்களின் பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திற்கான ஒதுக்கீடும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஓராண்டு கால ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு மாதம் 7,700 ரூபாயும்; இரண்டாண்டு ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு 8,050 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். அந்த தொகை, மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும். ஓராண்டு அளிக்கப்படும் பயிற்சியின் நிறைவில், தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

1 comment: