அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் முறைகேடு என்று புகார்: அமைச்சர பேட்டி - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 10, 2021

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் முறைகேடு என்று புகார்: அமைச்சர பேட்டி

 அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் முறைகேடு என்று புகார்: அமைச்சர பேட்டி


அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது என மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ''திமுக பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.


அவர்கள் பேசும்போது அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முறைகளில் குளறுபடி நடந்திருப்பதாகவும் அவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏராளமான மாணவர்கள் அரியர் தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.


மேலும் பொறியியல் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெற்றபோது முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகார் குறித்துப் பேசுவதற்காக மாணவர்களை அழைத்து இருக்கிறோம்: என்றார்

No comments:

Post a Comment