அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதேர்வுத் தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 4, 2021

அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதேர்வுத் தேதி அறிவிப்பு

 அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதேர்வுத் தேதி அறிவிப்பு


அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரி மாணவர்களுக்கான மறுதேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்வுகள் மே 17-ம் தேதி முதல் தொடங்குகின்றன.


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வு கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது.


இணைய வழியில் நடைபெற்ற இந்தத் தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரி மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.


அவர்களுக்கு மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலை. முடிவு செய்தது. இதற்கிடையே கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால், மறுதேர்வு ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வும், கடந்த ஆண்டு நவம்பர் அரியர் தேர்வு மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் அரியர் தேர்வு ஆகியவையும் மே 17-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 4 வரை ஆன்லைன் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும்.


மற்ற மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment