முதல்வரின் செயலர்கள் கவனிக்கும் துறைகள் விபரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 11, 2021

முதல்வரின் செயலர்கள் கவனிக்கும் துறைகள் விபரம்

 முதல்வரின் செயலர்கள் கவனிக்கும் துறைகள்  விபரம்


முதல்வரின் செயலர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 


அவர்கள் நான்கு பேரும் கவனிக்க வேண்டிய துறைகள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.


உதயசந்திரன்


முதல்வரின் முதல்நிலை செயலர் உதயசந்திரன், பொதுத்துறை, ஊழல் கண்காணிப்பு, தகவல் தொழில்நுட்பம், உள்துறை, மது விலக்கு ஆயத்தீர்வை, உயர் கல்வி, பள்ளிக்கல்வி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, தொழில்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, அறநிலையத்துறை ஆகியவற்றை கவனிப்பார்


உமாநாத்


இரண்டாவது செயலர் உமாநாத், எரிசக்தி, உணவு, சிறப்பு முயற்சி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், பொதுப்பணி கட்டடம், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், நீர் ஆதாரம், நிதி ஆகிய துறைகளை கவனிப்பார்.


சண்முகம்


மூன்றாவது செயலர் சண்முகம், மனிதவளம், கூட்டுறவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறம், சட்டசபை செயலகம், ஊரக வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி, தொழிலாளர் நலன், வேளாண்மை, சட்டம், முதல்வர் அலுவலக நிர்வாகம் ஆகியவற்றை கவனிப்பார். 


அனு ஜார்ஜ்


நான்காவது செயலர் அனுஜார்ஜ், சுற்றுச்சூழல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், கால்நடை, பால்வளம், மீன்வளம், கைத்தறி, சுற்றுலா, சமூக சீர்திருத்தம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, முதல்வர் சந்திப்பு, சுற்றுப்பயணம் போன்றவற்றை கவனிப்பார் என, அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment