வாவ் சொல்ல வைக்கிறது... ஆசிரியர்களின் வார் ரூம் பணி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 28, 2021

வாவ் சொல்ல வைக்கிறது... ஆசிரியர்களின் வார் ரூம் பணி

 வாவ் சொல்ல வைக்கிறது... ஆசிரியர்களின் வார் ரூம் பணி


கோவை:கலெக்டர் அலுவலகத்தினுள் செயல்படும், 'வார் ரூம்' மட்டுமல்லாமல், மாநகராட்சி சார்பில், மண்டல அளவிலும், பள்ளி அளவிலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பணிபுரிகின்றனர்.


இவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தொடர்பு கொள்வது, அவசர உதவிகள் தேவைப்பட்டால், மருத்துவர்கள் குழுவுக்கு தகவல் அளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்


.மக்களின் தேவைக்கேற்ப, ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்வது, மருத்துவருடன் ஆன்லைனில் ஆலோசனை பெற வைப்பது, உணவு பொருட்கள் வழங்குவது, கவுன்சிலிங் அளிப்பது உள்ளிட்ட பணிகளில், ஈடுபட்டு வருகின்றனர்


.வெள்ளலுார் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ஸ்ரீலதா கூறுகையில், ''கடந்த சில நாட்களாகதான், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் குழுவில் இணைந்து, பணியாற்றி வருகிறேன். இக்குழுவில், பெயர் குறிப்பிடாமல் நிறைய தொண்டு நிறுவனங்கள், கல்லுாரி மாணவர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளனர்.உதவி தேவைப்படுவோர் விபரங்களை, 104 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தெரிவித்து, அவர்களின் தேவைகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள, தன்னார்வலர்கள் மூலம் நிறைவேற்றப்படுகிறது.


கோவை மாவட்டத்திற்கான உதவிகள் தேவைப்பட்டால், 88703 71991 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.'


வென்டிலேட்டர்' கேட்டு அழைப்பு


வேறு சில ஆசிரியர்கள் கூறுகையில், 'தொற்றால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டி, போன் செய்யும் பலரும், ஆக்சிஜன் படுக்கை வசதி கேட்கின்றனர். லேசான தொற்று அறிகுறிகள் இருந்தாலும், ஆக்சிஜன் அளவு சற்று குறைந்தாலும், பயப்படுகின்றனர்.


 அச்சப்படுவோருக்கு, மருத்துவ குழு ஆலோசனைக்கு பரிந்துரைக்கிறோம். வென்டிலேட்டர் வேண்டி தொடர்பு கொள்வோர் எண்ணிக்கை, சமீபத்தில் அதிகரித்து விட்டது. உணவு வேண்டி வரும் அழைப்புகள் மிக குறைவு தான்' என்றனர்.

No comments:

Post a Comment