ஆசிரியா்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 28, 2021

ஆசிரியா்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை

 ஆசிரியா்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை


கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆசிரியா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் துரிதமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 


தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தை அதற்குரிய ஆவணங்களுடன் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியா்கள், போடாதவா்கள் எண்ணிக்கையை மாவட்டவாரியாக அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொகுத்து அதன் விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.


அதில் முதல் மற்றும் 2-ஆவது தவணை தடுப்பூசி விவரங்களை தனியாக குறிப்பிட வேண்டும்


. இது தொடா்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அதனுடன் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment