'கற்போம்; எழுதுவோம்' தேர்வு தள்ளிவைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 11, 2021

'கற்போம்; எழுதுவோம்' தேர்வு தள்ளிவைப்பு

 'கற்போம்; எழுதுவோம்'  தேர்வு தள்ளிவைப்பு


கற்போம்; எழுதுவோம்' இயக்கத்தில் படித்தவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்க இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த 2020 ~ ~21ம் கல்வி ஆண்டில் முற்றிலும் எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் இந்த திட்டம் ஜூலை வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.


இந்த திட்டத்தில் படித்தவர்களுக்கு, வரும் 16ம் தேதி இறுதி அடைவுத்தேர்வு நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வு மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது.மீண்டும் தேர்வு நடத்தும் வரை, தேர்வுக்கு வழங்கப்பட்ட வினா~ ~ விடைத்தாள் கட்டுகள், வருகைப் பதிவு, பேனா உள்ளிட்டவற்றை முத்திரையிட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். 


இந்த திட்டத்தில் படித்தவர்களுக்கு, கல்வி, 'டிவி' வழியே, மாலை 7:00 மணி முதல் 30 நிமிடங்களுக்கு வீடியோ பாடம் நடத்தி தேர்வர்களை பயன் அடைய செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment