கல்லூரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் தள்ளிவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

இங்கே தேடவும்!

Sunday, May 23, 2021

கல்லூரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் தள்ளிவைப்பு

 கல்லூரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் தள்ளிவைப்பு


மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் இன்று (மே 24) நடக்க இருந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஊரடங்கு நீட்டிப்பால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


கல்லூரிகளில் 2021 ஏப்., செமஸ்டர் மற்றும் 2020 ஏப்.,க்கான 'இம்ரூவ்மென்ட்' தேர்வுகள் மே 5 ~ ஜூன் 10 வரை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 


மே 8 வரை நான்கு தேர்வுகள் நடந்த நிலையில் மே 10 ~ 24 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மே 24க்கு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.


தற்போது மே 24 ~ 31 வரை ஊரடங்கு தொடர்வதாக அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment