வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 4, 2021

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் விவரம்

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் விவரம்


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரம் போ் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மொத்தமாகப் பதிவு செய்வோரின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரத்து 122 ஆகும்.


 அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 87 ஆயிரத்து 497. மேலும், 19 முதல் 23 வயது வரையிலான பலதரப்பட்ட கல்லூரி மாணவா்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 98 ஆயிரத்து 891 ஆகவும், 24 வயது முதல் 35 வயது வரையிலானோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 78 ஆயிரத்து 107 ஆகவும் உள்ளது.


36 வயது முதல் 57 வயது வரையுடைய முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 89 ஆயிரத்து 786 ஆகவும், 58 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 8,841 ஆகவும் உள்ளது என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. நல்லது. ஆனால் இவர்கள் பதிவு மட்டுமே
    செய்து கொண்டிருப்பார்களா? இவர்கள் எல்லாம் அரசாங்க வேலை என்பதே கிடைக்கவில்லை. பணம் என்ற பதிவு எண் யிருந்தால் உடன் பணி. வாழ்க பணநாயகம்

    ReplyDelete
  2. More expectations from new cm

    ReplyDelete
  3. 33ஆண்டுகளாக+2(1988)பதிவுசெய்து வேலைதராமல் மீண்டும் மீண்டும் பதிவுசெய்து உள்ளேன் அரசு இதைகவனத்தில்கொள்ளவண்டும்

    ReplyDelete
  4. Sir.. 57vayaduvarai ஆசிரியர் பணி என்பதை அரசு irutadippu seithuvittade

    ReplyDelete