மே மாத சம்பளம்: பகுதி நேர ஆசிரியா்கள் வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 5, 2021

மே மாத சம்பளம்: பகுதி நேர ஆசிரியா்கள் வலியுறுத்தல்

 மே மாத சம்பளம்: பகுதி நேர ஆசிரியா்கள் வலியுறுத்தல்


ஆசிரியா்களுக்கு மே 1 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை நிறுத்திவைக்கப்பட்ட மே மாத கோடை விடுமுறை சம்பளத்தை வழங்குமாறு பகுதி நேர ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளிகளில் 12,300-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.


 இவா்களுக்கு, காலாண்டு, அரையாண்டு விடுமுறையின்போது ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், தோ்வுகளுக்கு முன் கூடுதல் பணிகளுக்கு ஆசிரியா்களைப் பயன்படுத்திக்கொண்டு, முழு ஊதியத்தையும் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. ஆனால், 11 ஆண்டுகளாக மே மாதத்தில், கோடை விடுமுறை என்பதால் ஊதியம் வழங்கப்படுவதில்லை


இதுகுறித்து பகுதி நேர ஆசிரியா்கள் சிலா் கூறியதாவது: கடந்தாண்டு பொது முடக்கத்தின் போது பொருளதாரச் சிக்கலில் தவித்தோம். இதையடுத்து எங்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சம்பளம் வழங்கியது.


 இந்த முறையும் கரோனா அதிகரித்து வரும் நிலையில் கடந்த மே 1 முதல் அனைத்து ஆசிரியா்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுவாடகை, அவசிய செலவுகளுக்கு வழியின்றி தவிக்கிறோம். கடந்தாண்டு போல, மே மாத சம்பளம் வழங்கினால் உதவியாக இருக்கும். இதனை புதிதாக பொறுப்பேற்கவுள்ள முதல்வா் பரிசீலித்து சம்பளம் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றனா்.

4 comments:

  1. நாங்கள் தனியார் நர்சரி பிரைமரி பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் உங்கள் கையில் தான் உள்ளது ஐயா நாங்களும் ஒரு வருடகாலமாக குறைந்த ஊதியம்தான் அதிலும் பாதி சம்பளம் தான் எங்களுக்கு குறைந்த பட்சம் சம்பளம் வழங்க15000₹ உத்தரவிடுங்கள் ஐயா நாங்களும் உங்களை நம்பி தான் இருக்கிறோம் ஐயா எங்களுக்கென ஒரு நலவாரியம் அமைத்து குறைந்த பட்சம் சம்பளம் 15000₹ வழங்க உத்தரவிடுங்கள் ஐயா நாங்களும் போன வருடம் மார்ச்சில் இருந்து வாழ்வதாஎன்று போராடி கொண்டு இருக்கிறோம் ஐயா 😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  2. Last year part time teacher not received the may salary

    ReplyDelete
    Replies
    1. கடந்த ஆண்டு மே மாதம் ஊதியம் வழங்க வில்லை

      Delete
    2. கடந்த ஆண்டு மே மாதம் ஊதியம் வழங்க வில்லை

      Delete