ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் திட்ட இயக்குநா் எஸ்.கண்ணப்பன் நியமனம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 28, 2021

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் திட்ட இயக்குநா் எஸ்.கண்ணப்பன் நியமனம்

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் திட்ட இயக்குநா் எஸ்.கண்ணப்பன் நியமனம்


பள்ளிக் கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (‘சமக்ரசிஷா’) மாநில கூடுதல் திட்ட இயக்குநராக எஸ்.கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளாா்.


தமிழகத்தில் கடந்த மே 14-ஆம் தேதி 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதில் டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்த நந்தகுமாா் பள்ளிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டாா். அந்த உத்தரவில், ஏற்கெனவே பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த எஸ்.கண்ணப்பனுக்கு பதிலாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கிடையே பள்ளிக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்த எஸ்.கண்ணப்பனுக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில கூடுதல் திட்ட இயக்குநராக எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.

No comments:

Post a Comment