மருத்துவச் சேர்க்கையை மாநிலங்களே முடிவுசெய்ய அனுமதிக்க வேண்டும்; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 23, 2021

மருத்துவச் சேர்க்கையை மாநிலங்களே முடிவுசெய்ய அனுமதிக்க வேண்டும்; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

 மருத்துவச் சேர்க்கையை மாநிலங்களே முடிவுசெய்ய அனுமதிக்க வேண்டும்; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்


கரோனா தொற்று பரவல் குறைந்தபின் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தவும், மருத்துவ மாணவர் சேர்க்கையை அந்தந்த மாநிலங்களேமுடிவு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


நாடு முழுவதும் கரோனாதொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பள்ளி பொதுத்தேர்வுகள் மற்றும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காணொலிக் காட்சி வழியாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இதில் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்ஸ்மிருதி இரானி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள், துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதல்வரின் தனிச் செயலர் உதயச்சந்திரன் மற்றும் கல்வித் துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர். நோய்த்தொற்று குறைந்த பின் தேர்வுகளை நடத்தவேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் கூட்டம் முடிந்தபின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:


மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பொறியியல், விவசாயப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், நீட் தேர்வும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டுமே நடத்தப்பட வேண்டும். மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவகாரங்களை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே நாங்கள் பின்பற்றிய நடைமுறையின்படி சேர்க்கையை நடத்தி கொள்வோம் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அந்த கோரிக்கை எந்த அளவுக்கு ஏற்கப்படும் என்பது போக போகத்தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினர்.


தொடர்ந்து பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ' மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு நோய்த்தொற்று குறைந்தபின் பிளஸ் 2 பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று தமிழகத்தின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். தேர்வில்லாமல் தேர்ச்சி செய்யப்பட்டால் அது மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்' என்றார்

No comments:

Post a Comment