CBSE 12ம் வகுப்பு தேர்வு எப்போது? ஜூன் 1க்குள் அறிவிப்பு வெளியாகும் : மத்திய அமைச்சர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 23, 2021

CBSE 12ம் வகுப்பு தேர்வு எப்போது? ஜூன் 1க்குள் அறிவிப்பு வெளியாகும் : மத்திய அமைச்சர் தகவல்

 CBSE 12ம் வகுப்பு தேர்வு எப்போது? ஜூன் 1க்குள் அறிவிப்பு வெளியாகும் : மத்திய அமைச்சர் தகவல்


சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது தொடர்பான முடிவை ஜூன் 1ம் தேதிக்குள் அறிவிப்போம் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


 நாட்டில், சிபிஎஸ்இ தேர்வுகள், நீட், ஜெஇஇ  தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களில் ஒட்டுமொத்த கருத்து கேட்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததின் பேரில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை மற்றும் அமைச்சர்கள் 25ம் தேதிக்குள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி நேற்று கருத்து கேட்பு கூட்டம்இணையம் மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் பங்கேற்றனர்.


 கூட்டத்துக்கு பிறகு பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் கூறுகையில், தேர்வு நடத்துவது தொடர்பாக வரப்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன அழுத்தங்களை போக்குவதாக இருக்கும் என்று நம்புகிறோம்.


அவர்கள் ஆறுதலடையும் வகையில் தேர்வு குறித்த முடிவை வருகிற ஜூன் 1ம் தேதிக்குள் அறிவிப்போம். அதே நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். மேலும், சிபிஎஸ்இ அதிகாரிகள் தரப்பில் சில திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் பேரில்  இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதிக அளவிலான மாணவர்களும், பெற்றோரும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். 


 அத்துடன் மாணவர்களின் வாழ்வுடன் விளையாடக்கூடாது, பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. அதனால் பிரச்னை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு தான் தேர்வை நடத்த முடியும் என்றும், பிளஸ் 2 தேர்வு என்பது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையையும், உயர் கல்வியையும் தீர்மானிப்பதாக உள்ளது என்றும் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.


 கர்நாடக மாநிலத்தின் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் கருத்து கூறும் போது, 12ம் வகுப்பு தேர்வை மாணவர்களின் விருப்பத்தின் பேரில் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


முக்கிய பாடங்களுக்கு தேர்வு

மத்திய அமைச்சர் தலைமையில் ஆலோசனை  கூட்டம் நடந்து கொண்டு இருக்கும்  போதே அதிக அளவில் எங்களுக்கு டிவிட்டர் மூலம் நிறைய பதிவுகள் வந்தன.  அதிகாரிகள் தெரிவித்த கருத்தின் பேரில் இந்த தேர்வு தற்போதுள்ள முறையின்  கீழ் முக்கிய பாடங்களுக்கு மட்டும் நடத்திவிட்டு மற்ற பாடங்களுக்கு  மதிப்பெண் வழங்குவது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இது தவிர அதிக அளவில்  தேர்வு மையங்களை ஏற்படுத்தி சமூக இடைவெளியுடன் நடத்தலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்றொரு வாய்ப்பாக, தேர்வு  முறையை மாற்றுவது,  அதாவது மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் நடத்துவது தேர்வு நேரத்தை 3  மணி நேரத்துக்கு பதிலாக 90 நிமிடங்களாக குறைத்து, கொள்குறி(அப்ஜெக்டிவ்  டைப்) முறையில் கேள்விகள் கேட்பது என்றும் இதன் படி மாணவர்கள் 3 அல்லது 4  பாடங்களை மட்டும் தெரிவு செய்து எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment