புதிய வகை PVC ஆதார் கார்டு பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ! - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 4, 2021

புதிய வகை PVC ஆதார் கார்டு பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

 புதிய வகை PVC ஆதார் கார்டு பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ


புதிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆதார் கார்டு அட்டை தற்போது பல வித பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது PVC ஆதார் கார்டு என்று குறிப்பிடப்படுகின்றது.

ஆதார் கார்டு


இந்தியாவில் தற்போது ஒருவரின் தனிமனித அடையாளமாக ஆதார் கார்டு பார்க்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டு கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து ஆதார் கார்டு மிகவும் முக்கியமாக ஆவணமாக பார்க்கப்படுகிறது. இப்படியாக இருக்க, ஆதார் கார்டு பல வித புதிய அம்சங்களுடன் தற்போது PVC ஆதார் கார்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது


ஏடிஎம் கார்டு போலவே உருவாக்கப்பட்டிருக்கும் இதனை நாம் எளிமையாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். அதே போல் இந்த ஆதார் கார்டு தண்ணீரில் நனைந்தாலும் கிழியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் முறையில் கையொப்பம், ஹாலோகிராம் போன்றவை கூட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இது குறித்து அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த PVC ஆதார் கார்டை பெற,


முதலில், 


https://uidai.gov.in 


என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.


பின், அந்த இணையதளத்தின் மேற்புறத்தில் ‘My Aadhaar’ என்ற ஒரு ஆப்சன் இருக்கும்.


அதனை கிளிக் செய்து Get Aadhaar என்பதில் செல்ல வேண்டும்.


‘Order Aadhaar PVC Card’ என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்ததும்,


உங்களுது ஆதார் எண் குறித்த விவரங்கள் கேட்கப்படும்.


பின், அதில் உங்களது ஆதார் எண் மற்றும் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.


பின், உங்களது மொபைல் நம்பருக்கு ஒரு ஒடிபி வரும். அதனை பதிவு செய்து விட்டு சப்மிட் என்று கொடுத்தால், 50 ரூபாய் கட்டணம் செலுத்த கேட்கப்படும்.


கட்டணம் செலுத்தியதும், 5 நாட்களுக்குள் உங்களது ஆதார் கார்டு உங்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலமாக உங்களது முகவரிக்கு வந்து விடும்

No comments:

Post a Comment