SBI வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 1, 2021

SBI வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 SBI வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.95 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகக் குறைத்துள்ளது.


அது மட்டுமல்லாமல், வீட்டுக் கடன் வாங்கும் பெண்களுக்கு வட்டித் தொகையில் கூடுதலாக 0.05 சதவீத சலுகையும் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், எஸ்பிஐயின் செல்லிடப்பேசி செயலியான யோனோ செயலியில் வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கும் வட்டித் தொகையில் கூடுதலாக 0.05 சதவீதம் வட்டியில் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணைத் தொகை குறையும் என்று, புதிதாக வீடு வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இந்த வட்டிக் குறைப்பு மூலம், ரூ.30 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வட்டி 6.7% ஆகவும், ரூ.30 லட்சம் முதல் 75 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி 6.95 சதவீதமாகவும் ரூ.75 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடன் பெறுவோருக்கான வட்டி 7.05 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விழாக்கால சலுகையாக வீட்டுக் கடன்களுக்கான வட்டியை மார்ச்  31 வரை 6.7 சதவீதமாகக்  எஸ்பிஐ வங்கி குறைத்திருந்தது. இது ஏப்ரல் 1 முதல் 6.95 ஆக மீண்டும் உயர்ந்த நிலையில், தற்போது வட்டி குறைக்கப்பட்டுள்ளது

1 comment: