கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 28, 2021

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்


திருப்பூர் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு 

rte.tnschools.gov.in 

என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதன்படி வரும் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 3 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக LKG அல்லது  முதல் வகுப்பிற்கு இருப்பிட முகவரியில் இருந்து ஒரு கிமீ சுற்றளவுக்குள் இருத்தல் வேண்டும்.விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு SMS அளிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment