நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியம்: கலெக்டர் ஆர்த்தி பேச்சு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 10, 2021

நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியம்: கலெக்டர் ஆர்த்தி பேச்சு

 நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியம்: கலெக்டர் ஆர்த்தி பேச்சு


மாணவர்களை கல்வியில் மேம்படுத்தி நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு எந்த அளவுக்கு முக்கியமானது என கலெக்டர் ஆர்த்தி பேசினார்.


 காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 9 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார்.  எம்எல்ஏ க.சுந்தர், செல்வம் ஆகியோர் முன்னலை வகித்தனர்.


சந்தவேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமாரர், படூர் முஸ்லீம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெய வெங்கடாஜலபதி, மாத்தூர் தி.க.கி. அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை யுவராணி, ரெட்டமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கெ. முனுசாமி,


 மேல்கதிர்பூர் மேட்டுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை வி.கலைச்செல்வி, திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.குமார், அவளூர் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தி.தணிகைஅரசு, மருதம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க. கலைவாணி, குமணன்சாவடி தி நேஷ்னல் ஐடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வெ.பத்மாவதி ஆகியோருக்கு கலெக்டர்  ஆர்த்தி நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது.


நமது மாவட்டத்தில் ஆசிரியர்கள் 9 பேருக்கு நல்ல ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளனர்.


 மேலும், மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்க அனைத்து ஆசிரியர்களும் துணை நிற்க வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற அடிப்படையில் மாணவர்களை கல்வியில் மேம்படுத்தி நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை ஆசிரியர்கள் உணரவேண்டும் என்றார்.


 மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள் காஞ்சிபுரம் எல்லப்பன், ஸ்ரீ பெரும்புதூர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment