ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 18, 2021

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை

 ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை


சென்னை :'ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற, டி.ஆர்.பி., மற்றும் ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, சமக்ர சிக் ஷா திட்டத்தில் ஏற்பட்டுள்ள ஊழல்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்' என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், நேற்று சங்க நிர்வாகிகளை அழைத்து குறைகேட்பு கூட்டம் நடத்தினார். கமிஷனர் நந்தகுமார், இயக்குனர்கள் பழனிசாமி, நாகராஜ முருகன், உஷாராணி பங்கேற்றனர். சங்க நிர்வாகிகள் கூறிய கருத்துகள்:தியாகராஜன், மாநில தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்க கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும். 


பாரம்பரிய பள்ளி கல்வி இயக்குனர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் நடந்துள்ள ஊழல்களை விசாரிக்க, தனி ஆணையம் அமைக்க வேண்டும்.பேட்ரிக் ரைமண்ட், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அதிக அதிகாரம் அளித்துள்ளதால், அவர்கள் குறுநில மன்னர்கள் போல செயல்படுகின்றனர்.


இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரின் குறைகளை நிவர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசாணைப்படி, மாவட்ட அளவில் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்.


பள்ளிகளில், 210 நாட்கள் வேலை நாட்களாக இருந்தும், 200 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு சத்துணவு பொருள் வழங்கப்படுகிறது. 10 நாட்களுக்கு மாணவர்களை பட்டினி போடும் நிலை வரக்கூடாது. சீனிவாசன், மாநில தலைவர், பள்ளி கல்வி நிர்வாக அலுவலர் சங்கம்: புதிதாக 52 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.


முதன்மை கல்வி அலுவலகங்களில், நிர்வாக அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள் பணியிடத்தில், 2 சதவீதத்தை, அமைச்சு பணியாளர்களின் பதவி உயர்வுக்கு ஒதுக்க வேண்டும். அக்ரி மாதவன், மாநில தலைவர் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் சங்கம்: ஆறு முதல் பிளஸ் 2 வரை, வேளாண் அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும். வேளாண் தொழிற்கல்வி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் வேளாண் பட்டப்படிப்பு படிக்க அனுமதிக்க வேண்டும். இளமாறன், மாநில தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்: ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்க வேண்டும். மாவட்ட அளவில் இலவச 'நீட்' பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும்.


ராஜ்குமார், மாநில தலைவர், கலை ஆசிரியர் சங்கம்: தொழில்நுட்ப கல்விக்கான தேர்வை மீண்டும் நடத்த வேண்டும். ஓவிய பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும். 


ஓவியத்துக்கான பாடத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.


நந்தகுமார், பொதுச் செயலர், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம்: பத்து ஆண்டுகளுக்கு மேல் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். மூன்றாண்டு அங்கீகாரத்தை ஐந்தாண்டாக நீட்டிக்க வேண்டும்.


தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளை, எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும். 


ஒன்றிணைந்த மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம்: தனியார் பள்ளிகளில், 2019 _2020ம் ஆண்டு கல்வி கட்டணத்தையே தற்போதும் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். 


உயர் கல்விக்கும், போட்டி தேர்வுகுக்கும் அடிப்படையான பாடங்களை குறைத்துள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment