200 பொது சேவை மையங்களில் ஆதார் சேவை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 9, 2021

200 பொது சேவை மையங்களில் ஆதார் சேவை

 200 பொது சேவை மையங்களில் ஆதார் சேவை


:தமிழகத்தில் 200 பொது சேவை மையங்களில் (சி.எஸ்.சி) ஆதார் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மாநில சி.எஸ்.சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரன் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:சி.எஸ்.சி. மையங்களுக்கு பொதுமக்கள் சென்று தங்கள் ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை மேம்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தின் கிராம பகுதிகளில் 200 பொது சேவை மையங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. 


கிராமப்புற மக்கள் ஆதார் சேவைகளை தங்கள்வசிப்பிடத்துக்கு அருகேயே பெற வசதியாக அமையும்.இனி பொதுமக்கள் தாலுகா அலுவலகம், வங்கி, தபால்நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. சி.எஸ்.சி மையங்கள் காலை 9:00- இரவு 8:00 மணி வரை இயங்கும். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்றார்

No comments:

Post a Comment