சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 9, 2021

சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

 சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்


திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கோலப்பன்சேரியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள, 'சங்கல்ப்' சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை, நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இப்பள்ளி 20 ஆண்டுகளாக, சிறப்பு குழந்தைகள் வாழ்வின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது;


 200 குழந்தைகள் படிக்கின்றனர். கற்றல் குறைபாடுள்ள மற்றும், 'ஆட்டிசைம்' குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், இப்புதிய சங்கல்ப் பள்ளி துவக்கப்பட்டுள்ளது.


இப்பள்ளியில், குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, 'பிசியோதெரபி' சிகிச்சை, பேச்சுப் பயிற்சி சிகிச்சை போன்ற, சிறப்பு 

சிகிச்சைகள் அளிக்கப்படும். 


அந்த குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்திடும் வகையில், நகை தயாரிப்பு, பரிசுப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், சோப்பு தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, முகக்கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.பள்ளியை திறந்து வைத்த முதல்வர், அதன் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் இறையன்பு, சங்கல்ப் நிறுவன அறங்காவலர் முல்லாசரி அஜித் சங்கர்தாஸ், இயக்குனர்கள் சுபாஷினி ராவ், லட்சுமி கிருஷ்ணகுமார், சுலதா அஜித் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment