இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்று இடம் உறுதி செய்ய இன்றே கடைசி - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 3, 2021

இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்று இடம் உறுதி செய்ய இன்றே கடைசி

 இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்று இடம் உறுதி செய்ய இன்றே கடைசி


இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், முதல் சுற்றுக்கு இடத்தை உறுதி செய்யவும், இரண்டாம் சுற்றுக்குவைப்புத் தொகை செலுத்தவும் இன்றுடன் அவகாசம் முடிகிறது.


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு பி.இ., -பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், 'ஆன்லைன்' வழியில் கவுன்சிலிங் நடத்துகிறது.இதில், பொதுப் பிரிவில் நான்கு சுற்றுக்களாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. முதல் சுற்றில் 14 ஆயிரத்து 788 வரை தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள்; தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அவர்களின் விருப்ப பதிவுக்கேற்ப கணினி வழியில் உத்தேச ஒதுக்கீடு நேற்று வழங்கப்பட்டது


இதில், தங்களுக்கான ஒதுக்கீட்டை உறுதி செய்ய, இன்று மாலை 5:00 மணியுடன் அவகாசம் முடிகிறது. உத்தேச ஒதுக்கீடு பெற்றவர்கள், தங்களுக்கான ஒதுக்கீட்டை உறுதி செய்தால் மட்டுமே, அந்த இடம் இறுதி ஒதுக்கீடாக வழங்கப்படும்.எனவே, மாணவர்கள்கவனமாக செயல்பட்டு, உறுதி செய்வது உள்ளிட்ட ஐந்து வாய்ப்புகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். சந்தேகங்கள் இருந்தால், இன்ஜினியரிங் கவுன்சிலிங் உதவி மையங்களை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.


தர வரிசையில் 14 ஆயிரத்து 789 முதல், 45 ஆயிரத்து 227 வரை உள்ள மாணவர்களுக்கு இரண்டாம் சுற்றில் கவுன்சிலிங் நடக்கிறது. அவர்கள் கவுன்சிலிங்கிற்கான வைப்பு தொகை செலுத்தும் அவகாசம் அக்., 1ல் துவங்கியது. இன்று மாலை 5:00 மணிக்குள் வைப்பு தொகையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment