பள்ளிப்பட்டு தொகுதிக்கு அரசு மகளிர் கலைக்கல்லூரி: அமைச்சரிடம் எம்எல்ஏ மனு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 9, 2021

பள்ளிப்பட்டு தொகுதிக்கு அரசு மகளிர் கலைக்கல்லூரி: அமைச்சரிடம் எம்எல்ஏ மனு

 பள்ளிப்பட்டு தொகுதிக்கு அரசு மகளிர் கலைக்கல்லூரி: அமைச்சரிடம் எம்எல்ஏ மனு


பள்ளிப்பட்டு தொகுதியில் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி துவங்கவேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபுவிடம் சந்திரன் எம்எல்ஏ மனு கொடுத்துள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி ஆகியோர் வந்திருந்தனர்


அப்போது திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன், அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், `பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள கரிமேடு சிவன் கோயில், எஸ்விஜி. புரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி ஆகிய கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கிவைக்க வேண்டும். பள்ளிப்பட்டு தொகுதியில் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி துவங்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அப்போது, அவரிடம் உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment