புதிய கல்விக் கொள்கை நூலை 7ம் தேதி வெளியிடுகிறார் கவர்னர் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, December 31, 2021

புதிய கல்விக் கொள்கை நூலை 7ம் தேதி வெளியிடுகிறார் கவர்னர்

 புதிய கல்விக் கொள்கை நூலை 7ம் தேதி வெளியிடுகிறார் கவர்னர்

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை நூலை 7ம் தேதி வெளியிடுகிறார் கவர்னர்


அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தமிழில் எழுதிய, 'புதிய கல்விக் கொள்கை 2020 -ஒரு சாராம்சம்' என்ற நூலை, 7ம் தேதி, கோவையில் கவர்னர் ரவி வெளியிடுகிறார்.

புதிய கல்வி கொள்கை 2020 கிட்டத்தட்ட, 500க்கும் மேற்பட்ட பக்கங்கள் உடையது. இதில், பள்ளிக்கல்வி, உயர்கல்வி நிறுவனங்களில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து, 140க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

Minnal kalviseithi


இதை அனைத்து தரப்பு மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, கடந்தாண்டு அக்டோபரில், 60 பக்கங்களே கொண்ட, 'புதிய கல்வி கொள்கை 2020' என்ற ஆங்கில நூலை எழுதினார்.


இதை, அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். தமிழக புதிய கவர்னர் ரவி விருப்பத்திற்கு இணங்க, இப்புத்தகத்தின் தமிழாக்கம், 7ம் தேதி வெளியிடப்படுகிறது. 


கோவை கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடக்கும், உலகளாவிய திருக்குறள் கருத்தரங்கில், இப்புத்தகத்தை கவர்னர் ரவி வெளியிடுகிறார்.


புத்தகத்தின் ஆசிரியரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான பாலகுருசாமி கூறியதாவது:


மத்திய அரசின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட, புதிய கல்வி கொள்கை 2020ல், 21ம் நூற்றாண்டில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், பாடத்திட்டம் மாற்றுதல், ஆராய்ச்சிகள், கட்டமைப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது


இதை முழுமையாக படிக்காத சிலர், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதனால் தான், புதிய கல்வி கொள்கையின் சாராம்சத்தை, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதியுள்ளேன்.


 கிட்டத்தட்ட 10 லட்சம்ரூபாய் செலவில் அச்சிட்டு, இப்புத்தகத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன்.இவ்வாறு பாலகுருசாமி கூறினார்

No comments:

Post a Comment