மூத்த தமிழறிஞா்களுக்கான உதவித்தொகை பெற மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 6, 2023

மூத்த தமிழறிஞா்களுக்கான உதவித்தொகை பெற மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

 மூத்த தமிழறிஞா்களுக்கான உதவித்தொகை பெற மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகை  


வயது முதிா்ந்த மூத்த தமிழறிஞா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைப் பெற மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவா்கள் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்தவராகவும், அவரின் ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.

மேலும் வட்டாட்சியா் அலுவலகத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்றுடன், தமிழ்ப் பணியாற்றியதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணியாற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்றை இரண்டு தமிழறிஞா்களிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின்  இணையதள முகவரியிலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் தகுதியுடைய தமிழறிஞா்களுக்கு உதவித்தொகையாக ரூ.3,500 மற்றும் மருத்துவப்படியாக வாரந்தோறும் ரூ.500 வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மண்டலத் தமிழ் வளா்ச்சித் துறையின் துணை இயக்குநா்கள், மாவட்டத் தமிழ் வளா்ச்சித்

துறை துணை இயக்குநா், மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். இந்த அலுவலகங்கங்கள் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

மாவட்டங்களில் இருந்து நேரடியாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. சென்னை மாவட்டத்தில் வசிப்பவா்கள் இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை-8 என்ற முகவரிக்கு நேரடியாக சென்று சமா்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment