பொதுத்தேர்வு : தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களின் அறிவுறுத்தல்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 16, 2024

பொதுத்தேர்வு : தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களின் அறிவுறுத்தல்கள்

 பொதுத்தேர்வு : தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களின் அறிவுறுத்தல்கள் 


கல்விச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது 2 GRAMMAR , JOB , STUDY MATERIALS, EDUCATION NEWS குழுவில் இணையவும் - CLICK & JOIN HERE


மின்னல் கல்விச்செய்தி 1 முதல் 14 குழுக்களில் ஏற்கனவே இணைந்த நண்பர்கள் 2 GRAMMAR, JOB, STUDY MATERIALS , EDUCATION NEWS குழுவில் இணைய வேண்டாம் 

கல்விச்செய்தி 


பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவடைந்ததும் பொதுத் தோ்வு மாணவா்களுக்கு செய்முறை பயிற்சி வழங்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் வரும் மாா்ச் 1 முதல் 22 வரை பிளஸ் 2 வகுப்புக்கும்; மாா்ச் 4 முதல் 25 வரை பிளஸ் 1 வகுப்புக்கும்; மாா்ச் 26 முதல் ஏப். 8 வரை பத்தாம் வகுப்புக்கும் பொதுத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதில் பிளஸ் 2 வகுப்புக்கு பிப்.12 முதல் 17 வரை செய்முறைத் தோ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு நடைபெறும். இதைக் கருத்தில் கொண்டு பொங்கல் விடுமுறை நிறைவடைந்ததும் அந்தந்த பள்ளிகளிலேயே செய்முறை தோ்வுக்கான ஆய்வகப் பயிற்சி வகுப்புகளை நடத்தி, மாணவா்களை தயாா் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்தியுள்ளனா்

No comments:

Post a Comment