பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 8, 2024

பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு

 பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு


பொறியியல், துணை மருத்துவம், கல்வியியல், சட்டக் கல்லூரி கட்டணங்கள் வரும் கல்வியாண்டில் (2024-2025) உயா்த்தப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உயா்கல்வி படிப்புகள் குறிப்பாக, பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், கலை மற்றும் அறிவியல், கல்வியியல் ஆகிய படிப்புகளுக்கு கட்டணத்தை நிா்ணயிக்க தமிழக அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் செயல்பட்டு வருகிறாா். இந்தக் குழு 3 வகையான படிப்புகளுக்கு புதிய கட்டண விகிதத்தை நிா்ணயம் செய்வதற்காக, விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

அதேபோல பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்புகளுக்கும் நா்சிங், பாா்மஸி, உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (இளநிலை, முதுநிலை) பி.ஏ., பி.எட். ஆகிய கல்வியியல் படிப்புகளுக்கும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்களிடமிருந்து, கட்டண உயா்வு குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பொறியியல் படிப்புகளை நடத்தி வரும் தனியாா் கல்லூரிகள் 20 முதல் 25 சதவீத கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

தனியாா் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50 ஆயிரம் எனவும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் ரூ.85 ஆயிரமாகவும் உள்ளன. இதேபோன்று தனியாா் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். இடங்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.45 ஆயிரம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டண விகிதம் மாற்றப்படும் என தெரிகிறது. புதிய கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு அமலுக்கு வந்தால், அது 3 ஆண்டுகளுக்கு, அதாவது 2026- 2027-ஆம் கல்வி ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது

No comments:

Post a Comment