பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சா் ஆலோசனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 25, 2024

பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சா் ஆலோசனை

 பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சா் ஆலோசனை


பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சா் ஆலோசனை

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வரும் கல்வியாண்டில் (2024-2025) பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கலாமா, பொதுத் தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடா்பாக உயரதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினாா்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அவா் வியாழக்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை செயலா் ஜெ.குமரகுருபரன், இயக்குநா் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் கண்ணப்பன், அரசுத் தோ்வுகள் இயக்கக இயக்குநா் சேதுராம வா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளை எப்போது திறப்பது?, பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை திட்டமிட்டபடி வெளியிடுவது?, அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ள மாணவா்களின் எண்ணிக்கை, கூடுதல் மாணவா்களைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் விரிவான ஆலோசனை நடத்தினாா்

குறிப்பாக, தற்போது கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகளை ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது கடந்த ஆண்டைப்போல் பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

மேலும், பள்ளிக் கல்வித் துறையின் ஆண்டு திட்ட அட்டவணை, பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், மாணவா் சோ்க்கை, மாணவா்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடுதல் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment