அங்கீகரிக்கப்படாத இந்திய வரைபடங்களை பயன்படுத்தினால் 6 மாத சிறை: யுஜிசி சுற்றறிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 16, 2024

அங்கீகரிக்கப்படாத இந்திய வரைபடங்களை பயன்படுத்தினால் 6 மாத சிறை: யுஜிசி சுற்றறிக்கை

 அங்கீகரிக்கப்படாத இந்திய வரைபடங்களை பயன்படுத்தினால் 6 மாத சிறை: யுஜிசி சுற்றறிக்கை


இந்திய ஆய்வு (சர்வே) மூலம் தயாரித்து வழங்கப்பட்ட இந்திய வரைபடங்களை மட்டுமே பயன்படுத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக யுஜிசி செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘மத்திய சட்ட அமைச்சகத்தால் 1990-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தத்தின் படி சர்வே ஆஃப் இந்தியாவால் வெளியிடப்பட்ட இந்திய வரைபடங்களுடன் ஒத்துப்போகாத இந்திய வரைபடத்தை வெளியிடும் நபருக்கு அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். அல்லது, அதிகபட்சமாக இரண்டுமே சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்

எனவே உயர்கல்வி நிறுவனங்கள் இந்த சட்டத்துக்கு இணங்குவதை உறுதி செய்து, தங்களது கல்லூரிகளில் இந்திய ஆய்வு மூலம் தயாரித்து வழங்கப்பட்ட இந்திய வரைபடங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதையொட்டி குற்றவியல் சட்டத் திருத்த சட்டத்தின் இந்திய அரசிதழ் நகலும் தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment