நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 6, 2024

நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

 நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்


நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போது ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என்று தேசிய தேர்வுகள் முகமை விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு முடிவதற்கு முன்பே, வலுக்கட்டாயமாக தேர்வறைகளிலிருந்து வெளியேறிய மாணவர்களால் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் 4 மணிக்குத்தான் கசிந்ததாகவும், அதற்கு முன்பே தேர்வுகள் தொடங்கிவிட்டதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தான் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வுக் கூடத்தில், ஹிந்தியில் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு ஆங்கில வினாத்தாள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை உடனடியாக மாற்றிக்கொடுக்க தேர்வுக் கண்காணிப்பாளர்கள் முன்வந்தனர். ஆனால், அந்த மாணவர்கள் திடீரென வினாத்தாள்களுடன் தேர்வறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறியுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்வு முடிந்தபிறகுதான் மாணவர்கள் தேர்வறையிலிருந்து வெளியேற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், வலுக்கட்டாயமாக வெளியேறிய மாணவர்களால் மாலை 4 மணியளவில் சமூக வலைத்தளங்களில் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. ஆனால், அதற்குள் அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் தேர்வுகள் தொடங்கிவிட்டிருந்தன. எனவே, நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ராஜஸ்தானின் பரத்பூரில் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தோ்வா், எம்பிபிஎஸ் மாணவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராஜஸ்தானின் பரத்பூரில் மாஸ்டா் ஆதித்யேந்திர பள்ளியில் அமைந்த தோ்வு மையத்தில் இளநிலை மருத்துவ மாணவா் ஒருவா் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. தோ்வரான ராகுல் குா்ஜாரிடமிருந்து ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு மருத்துவ மாணவா் அபிஷேக் குப்தா, சக மாணவா் ரவி மீனாவுடன் இணைந்து இந்த மோசடியைச் செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடா்பாக உதவி காவல் கண்காணிப்பாளா் (ஏஎஸ்பி) அகிலேஷ் குமாா் கூறுகையில், ‘தோ்வுமையத்தில் ராகுல் குா்ஜாருக்குப் பதிலாக மருத்துவ மாணவா் அபிஷேக் தோ்வெழுத வந்து ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதை தோ்வு மையக் கண்காணிப்பாளா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து, அபிஷேக் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா். தொடா்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இக்குற்றத்துக்கு மேலும் ஐவா் உடந்தையாக இருப்பதை அவா் ஒப்புக்கொண்டாா். தோ்வு மையத்துக்கு வெளியே அவா்கள் காரில் காத்திருந்தனா்.

இதையடுத்து, தோ்வா் ராகுல் குா்ஜாா், மருத்துவ மாணவா்கள் அபிஷேக் குப்தா, ரவி மீனா மற்றும் அமித், தயாராம், சுராஜ் சிங் ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா். அனைவரையும் விசாரித்து வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும்’ என்றாா்.

No comments:

Post a Comment