ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று அவசியம்: பள்ளிக்கல்வி இயக்குநரிடம் அனுமதி பெற அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2024

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று அவசியம்: பள்ளிக்கல்வி இயக்குநரிடம் அனுமதி பெற அறிவுறுத்தல்

 ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று அவசியம்: பள்ளிக்கல்வி இயக்குநரிடம் அனுமதி பெற அறிவுறுத்தல்

பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்டோர், மாவட்டக் கல்விஅலுவலர், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கடவுச்சீட்டு பெறவும், புதுப்பிக்கவும் தடையின்மைச் சான்று வழங்க அனுமதித்து 2013-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, அனுமதி அளிக்கும் அதிகாரம் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உண்டு.

எனினும், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் வெளிநாடு செல்ல, துறைத் தலைவரான பள்ளிக் கல்வி இயக்குநரிடம் மட்டுமே விடுப்பு அனுமதி பெறவேண்டும். இது சார்ந்த கருத்துருகள் துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டு, உரிய அனுமதி பெற வேண்டும்.

இந்த விவகாரத்தில் 2007-ல் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment