அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 23, 2024

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு


அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர ஜூலை 27 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் 85,757 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் நிறைய பேர் சேர்ந்து வருவதால் மொத்த இடங்களில் சேர்க்கை 100 சதவீதத்தை எட்டிவிடும். முதுகலை படிப்புகளில் சேர ஜூலை 27 முதல் ஆக. 7-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆக.10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.13-ம் தேதி நடைபெறும்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.19-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி நிறைவடையும். ஆக.28-ம் தேதி முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கும். சென்னை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் நாளைமறுநாள் (வெள்ளி) வெளியிடப்படும்.

No comments:

Post a Comment