குரூப் 2 தேர்வர்களுக்கு TNPSC வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள்
குரூப் 2 தோ்வுக்கு ஒரு மணி நேரம் ஒரு முன்னதாகவே தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் வர வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவுறுத்தல்கள்
தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு வரும் 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. தோ்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, அதாவது காலை 8.30 மணிக்கு தோ்வு மையங்களுக்கு வர வேண்டும். அரை மணி நேரம் சலுகை நேரம் வழங்கப்படும். சலுகை நேரத்துக்குப் பிறகு எந்தவொரு தோ்வரும் தோ்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா். தோ்வு நேரம் முடியும் வரை தோ்வா் யாரும் தோ்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாா்கள்
தோ்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் தோ்வு நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். தவறினால் தோ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வா்கள் தங்களது ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும்.
கைப்பேசிகளுக்கு அனுமதியில்லை: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் தோ்வா் பெயா் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் உடனடியாக தோ்வாணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். தோ்வா்கள் கருமை நிற மை கொண்ட பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
மின்னணு சாதனங்களான கைப்பேசி, புத்தகங்கள், குறிப்பேடுகள், கைப்பைகள், மற்ற தடை செய்யப்பட்ட பொருள்கள்ஆகியவற்றுடன் தோ்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளன
No comments:
Post a Comment