பிஇ படிக்க 1 லட்சம் பேர் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 16, 2019

பிஇ படிக்க 1 லட்சம் பேர் விண்ணப்பம்

இன்ஜினியரிங் படிக்க இதுவரை கடந்த 16 நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.


 2019-20 கல்வியாண்டிற்கான இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 2ம் தேதி தொடங்கியது. இணையதளத்தில் (www.tndte.gov.in, www.tneaonline.in) மாணவர்கள் விண்ணப்பித்தனர்.


 இணையதளத்தில் விண்ணப்பிக்க வசதி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிப்பதற்காகவும், சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் 42 இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. பெரிய மாவட்டம் அல்லது மாநகராட்சிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உதவி மையம், சிறிய மாவட்டத்தில் ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டது.


 இந்நிலையில் கவுன்சலிங் விண்ணப்பித்தல் தொடங்கி நேற்றுடன் 16 நாட்கள் நிறைவடைந்தது. மே 31ம் தேதி வரை மாணவர்கள் இன்ஜினியரிங் கவுன்சலிங்குக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் நேற்று மாலை 5 வரை 1,00,818 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஜூன் 3ம் தேதி விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


ஜூன் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை 42 இன்ஜினியரிங் கவுன்சலிங் சேவை மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது.


ஜூன் 17ம் தேதி தகுதியுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஜூலை 30ம் தேதிக்குள் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தி முடிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment