பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வுக்க விண்ணப்பிக்காதவர்கள் தட்கல் முறையின் கீழ் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்காக ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க ஏற்கெனவே தேதி அறிவிக்கப்பட்டது.
அந்த தேதியில் விண்ணப்பிக்காமல் விட்ட மாணவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ்(தட்கல்) விண்ணப்பிக்கலாம்.
பள்ளிகள் மூலம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்கள் கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், நேரடி தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்தது. அந்ததேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இதன்படி, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 16, 17ம் தேதிகளில் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம்.
பிளஸ் 1 தேர்வு எழுதியோர் தங்கள் மதிப்பெண் பட்டியல் நகலையும், தேர்வுக்கு வராதவர்கள் ஹால்டிக்கெட்டையும், விண்ணப்பம் பதிவு செய்யும் அலுவலரிடம் காண்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35 இத்துடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தட்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:
Post a Comment