போலி டாக்டர் பட்டம் கொடுத்து தமிழக அரசு கல்லூரிகளில் சேர்ந்த பேராசிரியர்கள் 11 பேர் சஸ்பெண்ட்: சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 16, 2019

போலி டாக்டர் பட்டம் கொடுத்து தமிழக அரசு கல்லூரிகளில் சேர்ந்த பேராசிரியர்கள் 11 பேர் சஸ்பெண்ட்: சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவு

போலி டாக்டர் பட்டம் (Phd) கொடுத்து பணியில் சேர்ந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 11 பேராசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்யக்கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


 தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முனைவர் பட்டம் (phd) பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு அரசு கல்லூரிகளில்  பணியாற்றும் பேராசிரியர்கள் வட மாநிலங்களில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் இருந்து முனைவர் பட்டம் பெற்று பணியில் சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாவரவியல் பிரிவில் பணியாற்றிய இரண்டு உதவிப் பேராசிரியர்களின் முனைவர் பட்டங்கள் போலியானவை என்று கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.


அந்த உதவி பேராசிரியர்களில் ஒருவர் ராஜஸ்தானில் உள்ள வீர் ரன்வீர் பல்கலைக் கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்றிருந்ததும், மற்றொருவர் மேகாலயாவில் இருந்து சான்றிதழ் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் சான்றிதழ் வாங்கியிருந்த இரண்டு பல்கலைக் கழகங்களும் குறிப்பிட்ட அந்த மாநிலங்களில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிரடியாக நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் 11 பேராசிரியர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



இந்த விவகாரம் வெளியில் வந்த பிறகு தமிழகத்தில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்னும் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போலி சான்றிதழ்களை ெகாடுத்து பணியில் சேர்ந்துள்ளதாக மற்ற பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


 ஆனால்,  போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்லூரிக் கல்வி இயக்ககம் அதை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருக்கிறது.


 போலி சான்றிதழ்களை கொடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நபர்கள் மாதாமாதம் அரசிடம் இருந்து பாதி சம்பளத்தை பெற்று வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.



போலி சான்றிதழ்கள் விவகாரத்தில் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தண்டனைகள் கடுமையாக இல்லை என்பது தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான போலி சான்றிதழ்கள் வட இந்தியாவில் இருந்து தான் தயாரிக்கப்பட்டு இங்கு வந்துள்ளன.


முனைவர் பட்ட சான்றிதழ்களை சரிபார்க்க இங்கு போதிய வசதிகள் இல்லை என்பதுதான் பெரும் வேதனை.


பணி நியமனம் வழங்கும் போதோ அல்லது அதற்கு பிறகோ இந்த சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த ஆண்டில் பொன்னேரியை சேர்ந்த கல்லூரி ஒன்றில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் பீகாரில் இயங்கும் மகத் பல்கலைக் கழகத்தில் இருந்து வாங்கியதாக ஒரு சான்றிதழ் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், விசாரணையில் அந்த பல்கலைக் கழகம் அந்த சான்றிதழை வழங்கவில்லை என்றும் ெதரியவந்துள்ளது.


இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், பிஎச்டி சான்றிதழ்களில் கியூ ஆர் முறையை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க முடியும். பல்கலைக் கழக மானியக் குழுவின் மூலம் நடத்தப்படும் தேசிய திறனறி தேர்வில் வழங்கப்படும் சான்றிதழில் மேற்கண்ட கியூ ஆர் உள்ளது.


 அந்த குறியீட்டை ஸ்கேன் செய்து பார்த்தால் யுஜிசி இணைய தளத்தில் அந்த சான்றிதழ்க்கான நபரின் போட்டோ, அவர் பெற்ற மதிப்பெண்கள், தேர்வு விவரங்கள் அனைத்தும் பார்க்க முடியும். அதேபோன்ற முறையை பிஎச்டி சான்றிதழுக்கும் கொண்டு வர வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்த விவகாரம் தற்ேபாது பெரிதாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் முனைவர் பட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment