மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கூடுதலாக 100 சீட்கள் கிடைப்பதில் நீடித்த சிக்கல் நீங்கியதால் நடப்பாண்டிலேயே 100 சீட்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன.இக்கல்லுாரியில் தற்போது 150 எம்.பி.பி.எஸ்., சீட்கள் உள்ளன. கூடுதல் மாணவர்கள் படிக்க ஏதுவாக புதிதாக 100 சீட்களை தோற்றுவிக்க இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட்டது.
மதுரை மருத்துவக் கல்லுாரியின் கட்டட வசதிகளை மேம்படுத்த 66 கோடி ரூபாயில் பணி துவங்கியது.இதன் மூலம் கூடுதல் வகுப்பறைகள், மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், பிரமாண்ட விரிவுரையாளர் கூடங்கள், நிர்வாக அலுவலகங்கள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
மதுரையை போன்று நெல்லை மருத்துவக் கல்லுாரி சார்பிலும் 100 சீட்களை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு அக்கல்லுாரிக்கு புதிதாக 100 சீட்களை தோற்றுவித்து இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.
மதுரை மருத்துக்கல்லுாரி பற்றி எதுவும் குறிப்பிடாததால், 100 சீட்கள் கூடுதலாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.முன்னதாக ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் மதுரை மருத்துவக் கல்லுாரியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை மருத்துவ கவுன்சில் கவனத்துக்கு கொண்டு சென்று இருந்தனர். இதுவே கூடுதல் சீட்கள் கிடைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியது.
எப்படியும் வருகிற கல்வியாண்டில் 100 சீட்கள் கிடைத்துவிடும் என காத்திருந்த கல்லுாரி நிர்வாகம் ஏமாற்றம் அடைந்தது.இதற்கிடையே டில்லி சென்ற சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், நடப்பு கல்வியாண்டிலேயே சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறைபாடுகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என நேற்று முன்தினம் எழுத்துப்பூர்வமாகவும் உத்தரவாதம் அளித்தார்.
இதை இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்றுக்கொண்டது. எனவே துவங்க உள்ள கல்வியாண்டில் 100 சீட்கள் அதிகரிக்கப்பட இருப்பது உறுதியாகி உள்ளது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின்ஜோ நமது நிருபரிடம் கூறியதாவது:நெல்லை மருத்துவக் கல்லுாரியில் தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதால் அக்கல்லுாரியின் சீட்களை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்படவில்லை.
ஆனால் மதுரை மருத்துவக் கல்லுாரியில் சில குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. கூடுதல் சீட்கள் கிடைக்க அவற்றை சரிசெய்ய வேண்டும் என மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது.
அதன்படி அனைத்து குறைகளையும் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் உத்தரவாதம் அளித்ததை மருத்துவ கவுன்சில் ஏற்றுக்கொண்டது.
மதுரை மருத்துவக் கல்லுாரிக்கு 100 சீட்கள் தோற்றுவிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும், என்றார்.

No comments:
Post a Comment